காவலர் குடும்ப நல மையம் சார்பாக மகிழ்ச்சி திட்டம் சென்னை மாநகரில் 2021 ஆம் ஆண்டிலிருந்து வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் மனநல பிரச்சனைகளான தற்கொலை எண்ணம், மனஅழுத்தம், கவலை, குடும்ப உறவுகளின் சிக்கல், மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாதல் மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்படி மகிழ்ச்சி திட்டத்தின் மூலமாக விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் பயன் பெறும் வகையில் காவல் துறைத்தலைவர், தென்மண்டலம், மதுரை அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் இன்று 28.05.2024ம் தேதி விருதுநகர் உட்கோட்டம், சூலக்கரை காவல் நிலைய சரகம், சாய் மஹாலில் வைத்து மகிழ்ச்சி திட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். மேற்படி மகிழ்ச்சி திட்டம் நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரச்சனா அவர்கள் கலந்து கொண்டு வகுப்பு நடத்தினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் விருதுநகர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் 204 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து பயன் பெற்றுள்ளார்கள்.
Related Posts
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
June 23, 2024