இராஜபாளையம் உட்கோட்டம், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சரகம், ராஜீவ்காந்திநகரில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்திரசேகர் 59/24 என்பவர் கடந்த 13.04.2024ம் தேதி சொந்த வேலை காரணமாக தனது வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்ற சமயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 59 பவுன் தங்க நகைகள் மற்றும் 60,000/- பணத்தை திருடி சென்று விட்டதாக கொடுத்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிரமாக புலன் விசாரணை மேற்கொண்டதில் 1. முத்துச்சாமி (32) த.பெ. பிச்சை, காவல்காரன்பட்டி, திருச்சி, 2. கணேசன் (38), த/பெ. சுப்பையா, வடக்குத்தெரு, வெம்பக்கோட்டை ஆகிய எதிரிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு மேற்படி எதிரிகளை கடந்த 16.04.2024ம் தேதி கைது செய்து, திருடுபோன 59 பவுன் தங்க நகைகள் 50,000/- பணத்தை மீட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் ,மற்றும் இன்று 01.06.2024ம் தேதி மேற்படி திருட்டு வழக்கில் விரைவில் எதிரிகள் மற்றும் திருடுப்போன சொத்துக்களை மீட்க சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினர் 1. திரு. சக்திகுமார் (சார்பு ஆய்வாளர்) 2. திரு. கோபாலகிருஷ்ணன் (சிறப்பு சார்பு ஆய்வாளர்) 3. திரு.முத்துகாண்டியார் (சிறப்பு சார்பு ஆய்வாளர்) மற்றும் காவலர்கள் திரு. இளங்கோ, திரு. பாலகுமார், திரு. காளிதாசன், திரு. கணேசன், திரு. சந்தோஸ், திரு. பாலாஜி மற்றும் திருமதி. ராமதிலகம் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி, வெகுமதி வழங்கினார்கள்