விருதுநகர் மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், சூலக்கரை காவல் நிலைய சரகம், திரு.வி.க நகர், CO காலனி, 1/289 என்ற முகவரியில் உள்ள கண்ணன் என்பவரின் மனைவி கோதையாண்டாள் 72/24 என்பவர் கடந்த 26.04.2024ம் தேதி காலை 0600 மணியளவில் தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்து இருந்த தங்கச் செயின் மற்றும் தாலி செயின் (சுமார் 5 1/4 பவுன்) பறித்து விட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் தனிப்படை அமைத்து, சம்பவம் இடத்தில் உள்ள CCTV கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் டவர் Location ஆகியவற்றை ஆய்வு செய்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 1. முகம்மது ஷான் (24/24), த/பெ. ஜாகீர்உசைன் மற்றும் 2. ரம்ஜாத் (23/24) த.பெ. ஷாஜகான் ஆகியோர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை கைது செய்து திருடுபோன 51/4 பவுன் தங்க செயின் மீட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று 05.06.2024ம் தேதி மேற்படி திருட்டு வழக்கில் விரைவில் எதிரிகள் மற்றும் திருடுப்போன சொத்துக்களை மீட்க சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினர் திரு. அங்காள ஈஸ்வரன் (சார்பு ஆய்வாளர்), தலைமை காவலர்கள் திரு. சரவணக்குமார், திரு. பிரபு, திரு. முரளிதரன் மற்றும் திரு. முத்து ஈஸ்வரன் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி, நற்பணி சான்றிதழ் வழங்கினார்கள்