சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்கள் முதல் காவல் உதவி ஆய்வாளர்கள் வரையிலான காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகையினை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து (TNPBF) பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 18 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து (Tamilnadu Police Benevolent Fund – TNPBF) மொத்தம் ரூ.31,90,377/-  ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், .கா.., , இன்று (23.05.2024) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்படி சிறப்பு மருத்துவ சிகிச்சை தொகை ஒதுக்கீடு பெற்ற 18 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை உதவி தொகை ரூ.31,90,377/-க்கான வரைவோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில் குமார் சி சரத்கர், இ.கா.ப காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) A.கயல்விழி, இ.கா.ப., துணை ஆணையாளர்கள் K.அதிவீரபாண்டியன் (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.