சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து 1 போக்குவரத்து காவல் ஆய்வாளர் உட்பட 2 காவல் ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள்,   4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 1 காவலர், 1 அமைச்சுப்பணியாளர் மற்றும் 1 துப்புரவு பணியாளர் என மொத்தம் 18 காவல் அலுவலர்கள் (31.10.2023) பணி ஓய்வு பெற்றனர்.

அதன்பேரில், (31.10.2023), வேப்பேரியிலுள்ள, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் சுமார் 28 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கினார்.

காவல் ஆணையாளர் அவர்கள், ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என காவல் ஆணையாளர் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்), திரு.கபில்குமார் சி.சரட்கர், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்கள் திரு.S.ராதாகிருஷ்ணன், (தலைமையிடம்), திரு.V.R.சீனிவாசன் (நிர்வாகம்) மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.