தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், சிறப்பாக பணிபுரிந்த 100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை தலைமை இயக்குநர், படைத்தலைவர், தமிழ்நாடு அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் முன்னிலையில், இன்று (08.06.2024) வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 3 காவல் உதவி ஆணையாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 18 காவல் உதவி ஆய்வாளர்கள். 11 சிறப்பு உதவி ஆய்வாளர்கள். 54 காவல் ஆளிநர்கள் மற்றும் 2 போக்குவரத்து வார்டன்கள் என மொத்தம் 100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

கீழ்காணும் காவல் பாராட்டப்பட்டனர். அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சிறப்பான பணிக்காகப்

கிழக்கு மண்டலம்

G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் திரு.முகேஷ் ராவ் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஆனந்தன். முதல்நிலை காவலர் திரு.ஹேமநாதன் (மு.நி.கா. 44476), காவலர்கள் திரு.கார்மேகம் (கா.55245), திரு.முரளி (கா.58245). திரு.ரமேஷ் (கா.56741) ஆகியோர் வாகனத் தணிக்கையின்போது. உடல்வலி நிவாரண மாத்திரைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த 2 நபர்களை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

D-5 மெரினா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாலசுப்ரமணியம். முதல்நிலைக் காவலர் திரு.பிரவீன்குமார் (மு.நி.கா.39451). காவலர்கள் திரு.சங்கர் (கா.62770), திரு.ராம்குமார் (60254) ஆகியோர் வாகன தணிக்கையின்போது. ஆயுதங்களுடன் வாகனங்களில் வந்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

E-4 அபிராமபுரம் காவல் நிலைய காவலர் திரு.சுரேஷ்கண்ணன் (கா.49268) இரவு ரோந்து பணியின்போது திருட்டு குற்றவாளியை கைது செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.

D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய காவலர் திரு.ராஜா (கா. 49129) வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்ற தண்டனை கிடைக்க நீதிமன்ற அலுவல் பணி செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.

தெற்கு மண்டலம்

J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கார்த்திக் ராஜா, தலைமைக் காவலர் திரு.கார்த்திக்கேயன் (த.கா.37357), முதல்நிலைக் காவலர் மௌலீஸ்வரன் (மு.நி.கா. 50825) ஆகியோர் 3 குற்றவாளிகளை கைது செய்து, 448 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.கார்த்திக்கேயன். திரு.கனகராஜ், பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. உஷாமதி. தலைமைக் காவலர்

திரு.குபேந்திரன் (த.கா. 25845) ஆகியோர் கொலை வழக்கு குற்றவாளி கைது செய்தும், மற்றொரு வழக்கில் 5 குற்றவாளிகளை கைது செய்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

புனித தோமையர்மலை காவல் மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.மாதவன், தலைமைக் காவலர் திரு.அல்போன்ஸ் வரீத் (த.கா. 35970), ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

வடக்கு மண்டலம்

B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பொன்பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மனோகரன், தலைமைக் காவலர் திரு.முகமது (த.கா.43394), முதல்நிலைக் காவலர்கள் திரு.நவ்ஷத் பாஷா (மு.நி.கா.38985), திரு.சண்முகம் (மு.நி.கா.46790), காவலர் திரு.சுகுமார் (கா. 39153) ஆகியோர் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

P-2 ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வீராசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாஸ்கரன். பெண் காவலர்கள் திருமதி.பாரதி (பெ.கா.52731), திருமதி.ஜோதிமாலா (பெ.கா.54268) ஆகியோர் 1991 முதல் 2019ம் ஆண்டு வரையிலான நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த 218 வழக்குகளை விரைந்து முடித்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

மேற்கு மண்டலம்

மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சாந்தி தேவி, உதவி ஆய்வாளர் திரு.கோபிநாதன். சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன்,

தலைமைக் காவலர்கள் திரு.குமரன் (த.கா. 28024), திருமதி.உமா (பெ.த.கா.20792) ஆகியோர் கம்போடியாவில் பயிற்சி பெற்ற 4 இணையவழி மோசடி குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

V-6 கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைச்செல்வி, உதவி ஆய்வாளர் திரு.ஆறுமுக நயினார். தலைமைக் காவலரகள் திரு.பாலாஜி (த.கா.24866), திரு.சரவணன் (த.கா.36669), காவலர் கோபிநாத் (கா.58232) ஆகியோர் இணையவழி மோசடி குற்றவாளிகளை கைது செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்

J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.அசோகன்,போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ரமணாகாந்தி, திரு.சசிகுமார்.திரு.ரமேஷ் (த.கா.25741) B-3 கோட்டை போக்குவரத்து காவல் நிலைய உதவி
ஆய்வாளர்கள் திரு.ஜெயபிரகாசம். திரு.அண்ணாமலை. D-1 திருவல்லிக்கேணி போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.விஜயரங்கன், திரு.நூருல் ஜமீத் (மு.நி.கா. 47281). C-1 பூக்கடை போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர்
திரு.திருநாவுக்கரசு (த.கா.30855), திரு.கார்த்திக்கேயன் (கா.49876), G-7 சேத்துப்பட்டு போ.கா.நி., முதல்நிலைக் காவலர்கள் திருமதி.ஆனந்தி (…47139),E-2 இராயப்பேட்டை போ.கா.நி., திரு.ரஹ்மான்கான் (மு.நி.கா.46345), திரு.சிவகுமார் (மு.நி.கா.29869), G-3 கீழ்பாக்கம் போ.கா.நி., காவலர் செல்வி சத்யா (பெ.கா.61992),போக்குவரத்து வார்டன்கள் திரு.தீர் மற்றும் திரு.ராஜேஸ்வரன் ஆகியோர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.

இதே போல, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல் உதவி ஆணையாளர்கள் திரு.சுரேந்திரன், திருமதி.சரண்யா, திரு.ராஜசேகரன், காவல் ஆய்வாளர்கள் திரு.ஜானி செல்லப்பா, திரு.பூமாறன், திருமதி.கலாராணி, திருமதி.மேரி ராணி, திருமதி.ஜெயவனிதா, திருமதி.முருகேஸ்வரி. திரு.வீராச்சாமி உதவி ஆய்வாளர்கள் திரு.கணேசன், திரு.முகமது அன்சார். திரு.கார்த்திக்கேய வெங்கடாச்சலபதி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார். தலைமைக் காவலர் திரு.சார்லஸ் பிரவுன் (த.கா.26390) ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

மேலும், குற்ற ஆவண காப்பகத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.சித்ராதேவி. மோப்பநாய் பிரிவு தலைமைக் காவலர் திரு.ஜெகன் (த.கா.28060), ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் திரு.கண்ணன் (த.கா.43436), திரு.தவமணி (த.கா.21065), திரு.நடராஜன் (த.கா.43445), திரு.ஈஸ்வரன் (த.கா.32132). காவலர்கள் செல்வி கோமதி (பெ.கா.59440). செல்வி பாக்யலஷ்மி (பெ.கா.59963), மோட்டார் வாகனப்பிரிவைச் சேர்ந்த, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.மேகநாதன், திரு.கோபிநாத்,

முதல்நிலைக் காவலர் திரு.அரவிந்த் (மு.நி.கா.40899), காவல் அருங்காட்சியக பெண் காவலர்கள் செல்வி நிவேதா (பெ.கா.59378). செல்வி தர்ஷினி (பெ.கா.54559), காவல் மருத்துவமனை தலைமைக் காவலர் திரு.திருமலை கணேஷ் (த.கா.20796). முதல்நிலை பெண் காவலர் திருமதி.கலா (மு.நி.பெ.கா.41008). நவீன கட்டுப்பாட்டறை பெண் காவலர்கள் திருமதி.சுகன்யா (பெ.கா.41959), செல்வி அர்ச்சனா (பெ.கா.53787), நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜா. உதவி ஆய்வாளர்கள் திரு.சுபாஷ், திரு.வெங்கடேசலு, தலைமைக் காவலர் திரு.சரவணன் (த.கா.25839), முதல்நிலைக் காவலர் சேர்மதுரை (மு.நி.கா. 40879), சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு.டில்லி, தலைமைக் காவலர்கள் திரு.வெங்கடேசன் (5.5.23702). திருமதி.தனலஷ்மி (பெ.த.கா.28008). திருமதி.நந்தினி (பெ.த.கா.32607) மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.கோபி (மு.நி.கா. 12228) ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர். படைத்தலைவர் அவர்கள் மேற்படி சிறப்பாக பணிபுரிந்த 100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்கும்படி தொடர்ந்து சிறப்பாக பணிபுரியுமாறு அறிவுறுத்தினார்.