சென்னை பெருநகர காவல், கட்டுப்பாட்டு அறையின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்கு 91 மெயின் ரோந்து வாகனங்களும் (Main Patrol Vehicles), 36 கூடுதல் ரோந்து வாகனங்களும் (Additional Patrol Vehicles), 104 ஜிப்சி ரோந்து வாகனங்களும் (Gypsy Patrol Vehicles), 43 ஸ்பெஷல் மொபைல் ரோந்து வாகனங்களும் (Special Mobile Patrol Vehicles) இயங்கி வருகிறது. இது மட்டுமின்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 47 போக்குவரத்து ரோந்து வாகனங்களும், (Traffic Patrol Vehicles) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 30 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் (Pink Patrol Vehicles) என மொத்தம் 351 காவல் ரோந்து வாகனங்கள்இயங்கிவருகிறது.
இதில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் கடந்த 10.06.2022 அன்று சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்கு 46 புதிய Crysta ரோந்து வாகனங்களும் போக்குவரத்து பிரிவிற்கு 47 புதிய Crysta ரோந்து வாகனங்களும் என மொத்தம் 93 ரோந்து வாகனங்கள். சென்னை பெருநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கிடைக்கும் தகவலை பெற்று போலீசார் ரோந்து வாகனம் மூலம் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, பொதுமக்களின் பிரச்சனைகள் விரைவாக தீர்க்கப்படுவதால் பொதுமக்களிடம் ரோந்து வாகனங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவுப்படி 47 இன்னோவா ரோந்து வாகனங்கள், 23 இன்னோவா VIP பாதுகாப்பு வாகனங்கள், 21 பொலீரோ ரோந்து வாகனங்கள், 15 டெம்போ டிராவலர் வாகனங்கள், 4 Green Gypsy ரோந்து வாகனங்கள் என மொத்தம் 110 வாகனங்களில் ஒளிரும் வண்ண விளக்குகள் (Beacon Lights) புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.
நேற்று (26.06.2023) எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு புதிய ஒளிரும் வண்ண விளக்குகள் (Beacon Lights) பொருத்தப்பட்டுள்ள 110 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ரோந்து வாகனங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஒளிரும் வண்ண விளக்குகளால், பொதுமக்கள் ரோந்து வாகனங்களை பார்க்க கூடிய தெரிவு நிலை அதிகரிப்பதுடன், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., துணை ஆணையாளர்கள்K.சௌந்தரராஜன் (ஆயுதப்படை-1), இராதாகிருஷ்ணன், (ஆயுதப்படை-2).S.கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.