தன்னை நோக்கி வந்த
பூப்பந்தை
போ… போ… என்று
தமிழக போலீசார் அடித்த அடியில்
தீப்பந்தாக
மாறி பறந்தது…!

பூ பறிக்கும் பூவையரும் பூப்பந்தை அடித்தபோது,
அது
பூவாக போகவில்லை புயலாக போனதல்லவா???

எதிராய் வந்த பூப்பந்தை
சிதற விட்டனர்…!
எதிர்த்த
எதிரணியை
பதற விட்டனர்…!

இவர்கள்
திமிரில் ஆடியதில்லை..
பந்தா ஆட்டம்..!
தங்கள்
திறமையுடன் ஆடியது தான் ..
பந்தாட்டம்…!

சூரியனை சுற்றி சுற்றி வருகிறது
பூமி பந்து..!
இவர்கள்
சூப்பராக
சுழற்றி சுழற்றி அடித்ததோ… பூப்பந்து…!

எப்படிப்பட்ட பணித்திறன் போட்டி வைத்தாலும்
வெற்றி பெறும் தமிழக போலீசாருக்கு இந்த
பூப்பந்து போட்டியில் புகுந்து விளையாட தெரியாதா என்ன???

இவர்கள் ஆடியது பூப்பந்தாட்டம்..! இவர்கள் வென்ற பதக்கங்களால் காவல்துறை ஆனது பூந்தோட்டம்…!

இந்தியாவில்
எந்த மாநிலத்திலும் இருக்கலாம்..
போட்டிக்கான களம்..!
அது எப்பவும்
தமிழக போலீசாரின்
வெற்றிக்கான தளம்..!

இவர்களை நோக்கி வந்த
பூப்பந்து பருந்தானது..! அதுதான்
இவர்களின்
வெற்றிக்கான விருந்தானது..!

இவர்களின்
நெற்றி வியர்வை…
தந்தது…
வெற்றி உயர்வை..!

இவர்கள்
ஆடியது தெலுங்கானாவில்…!
இவர்களுக்காக
நான் பாடியது
தமிழ் கானாவில்..!

அணியாகவும்
துணிவாகவும்
விளையாடி
தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை அணிகலன்களாக அணிந்து
தமிழக காவல்துறைக்கு
பெருமை சேர்த்த இவர்களுக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…!

தமிழக காவல்துறையில் பணிபுரியும் விளையாட்டு
வீரர் வீராங்கனைகளே… உங்களுடைய
பதக்க வேட்டை தொடரட்டும்..!
உங்களை
நான்
பாராட்டி
எழுதுவதும்
தொடரட்டும்..!
என்று விரும்புகிறேன்… வாழ்த்துகிறேன்…

உங்கள்
நங்கை RSK@
இரா. செல்வகுமார்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்,
வர்ணனையாளர்,
சென்னை பெருநகர காவல்,
ஆயுதப்படை -1 , சென்னை -2.