நாகை மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து இ ஜி எஸ் பிள்ளை மருத்துவமனை நாகை,மற்றும் மெட் மருத்துவமனை திருச்சி, ஆகிய இரு மருத்துவமனையின் சிறந்த மருத்துவர்களை கொண்டு நாகை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினரின், ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பெண்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், மற்றும் ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் காவல் துறையினரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். சிறப்புடன் செயல்பட்ட இம்மருத்துவ முகாமினை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ கா ப அவர்கள் தொடங்கி வைத்ததுடன் சக காவலர்களுடன் தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்கள்.
Related Posts
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் மற்றும் பணிகள் பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
February 24, 2024
கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS., தேசிய சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
February 14, 2024