நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 20.12.2023 இன்று உதவி ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்களின் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்க்கு உட்பட்ட நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 1)சத்திய பவானி (33) க/பெ தேவேந்திரன், தெற்கு, நல்லியான் தோட்டம் 2)சுகுனா (34)க/பெ செந்தில் குமரன், மகாலெட்சுமி நகர் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 4 கிலோ, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

அதே போல் நேற்று (19.12.2023) தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை நகர காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோட்டை வாசல்படி அருகில் சட்டத்திற்கு புறம்பாக மொக்கமாயி, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 1) ரேவதி (34) த/பெ பச்சை பிள்ளையார் கோவில் தெரு, வெளிப்பாளையம், 2) ரிக்கிபாண்டி (22) த/பெ முருகன், மருந்து கொத்தால தெரு நாகப்பட்டினம் பப்ளிக் ஆபிஸ்ரோடு, வெளிப்பாளையம், 3) ரமனா (23) த/பெ சின்னவீரன், திருவாரூர் ஆகிய 3 நபர்களை கைது செய்தும் அவரிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் (HONDA AMAZE) மற்றும் ஒரு இரு சக்கரவாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.