நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் நாகூர், வாஞ்சூர், திட்டச்சேரி, கீழ்வேளூர், சிக்கல் ஆகிய இடங்களில் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டார்கள், பணியில் இருந்த காவல்துறையினருக்கு முறையாக கைதுப்பாக்கிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்கள். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்களின் உத்தரவின் படி இன்று (12.07.2024) நாகப்பட்டினம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட காவலர்களை கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் அதிரடி வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நாகூர், வாஞ்சூர்,திட்டச்சேரி, கீழ்வேளூர், சிக்கல் ஆகிய இடங்களில் தானே அதிரடியாக இறங்கி வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். பின்பு கை துப்பாக்கியுடன் பணியில் இருந்த காவல்துறையினருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
Related Posts
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள 98 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழிப்பு
September 4, 2023
கோவைமாவட்ட காவல்கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS, இணையதள மோசடியில் பொதுமக்கள் இழந்த பணத்தை உரிய நபரிடம் ஒப்படைத்தார்
October 31, 2023