கடந்த 2008 ஆண்டு பாகிஸ்தானிலிருந்து கடல் வழியியே ஊடுருவி வந்த தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதலை நடத்தினர்.அதன் பிறகு கடல் வழி தீவிரவாத ஊடுருவலை தடுக்கவும் மற்றும் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யயும் நாடு முழுவதும் சாகர் கவாச் ஆப்ரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினரால் ஆபரேஷன் சாகர் கவாச் என்ற பெயரில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இப் பயிற்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 23 மீனவ கிராமங்களில் உள்ளஉறுப்பினர்கள் மற்றும் இந்திய கடலோர படை, இந்திய நேவிப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை, தமிழ்நாடு கடலோர காவல் படை மற்றும் தமிழ்நாடு மீன்வளத்துறை ஆகியோர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பயிற்சி ஒத்திகை சரிவர நடக்கிறதா என்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள்.