*28 பிப்ரவரி 2024ல் பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை டிராபிக் இன்ஸ்பெக்டராக பணியில் தொடர்ந்தது முதல் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இந்த ஹாக்கி விளையாட்டு வீரரான ஹாக்கி + காக்கி.
*தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆன NH45 ல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லையான பகுதிகளில் தனது சீரிய செயல்பாடுகளை முழுவதுமாக செயல்படுத்தி வருகிறார்.
*அதிக மணல் குவாரிகளை கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் HEAVY LOAD வாகனங்களை முழுவதுமாக தனிமைப்படுத்தி , மேற்பாய்களை இட்டுச் செல்ல வலியுறுத்தி அதிக எடை சுமைகளை ஏற்று செல்லாத வன்னம் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இடம் தனித்தனியாக அறிவுரைகள் வழங்கி கட்டுப்பாடுகளை விதிர்த்துள்ளார்.
*மேம்பாலங்கள் பணி நடைபெற்று வரும் பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் பயன்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டியும் சாலை பகுதிகளை தனிமைப்படுத்தி காண்பித்தும் வருகிறார்.
*ஏற்கனவே விபத்து நடந்த இடங்களை ஆராய்ந்து விபத்துகளை தடுக்கும் வண்ணம் தடுப்பணைகளை இட்டு சீரமைத்து வருகிறார்.
*சாலையில் தேங்கி நிற்கும் மணல் தீட்டுகளால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன என ஆராய்ந்து அதற்கான முன்னெச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் கே.கற்பகம் அவர்களிடம் முறையிட்டு சீரமைப்பு செய்து வருகிறார்.
•வல்லாபுரம் பிரிவு சாலை
•ஊட்டத்தூர் பிரிவு சாலை
•பாடலூர் பிரிவு சாலை
•பேரளி சுங்க சாவடி சாலை
அனைத்து பகுதிகளிலும் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
*பள்ளி மாணவர்களிடம் தனது தாய்-தந்தையர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற துண்டு பிரசுரங்களை தொடர்ச்சியாக வழங்கி அவர்கள் மனதில் விதைத்து வருகிறார்.
*18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்ற சட்ட நடைமுறைப்படுத்தப்பட்டதை சிறுவர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறி விழிப்புணர்வு வழங்கி வருகிறார்.
*அதிகமாக விபத்து நடக்கும் இடங்களில் பொதுமக்களை ஒன்று சேர்த்து அவர்கள் மத்தியில் சாலை கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி விபத்திலா மாவட்டத்தை உருவாக்க வேண்டும் உறுதி ஏற்று வருகிறார் .
*மழைக்காலங்களில் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீர் இடங்களை ஆராய்ந்து அதற்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்.
*தனியார் கல்லூரி மாணவர்களுடன் (25.06.24)நேற்றைய தினம் உலக வெண்புள்ளி நாளான அன்று கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினார் .
*மாவட்ட உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று போதைப்பொருள், ஹெல்மெட் ,குடித்து விட்டு வாகனம் இயக்குதல் போன்றவற்றிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் .
*பொதுமக்கள் மத்தியில் ஓரளவை விபத்தை குறைத்துள்ளார் என்று பெருமிதம் கொள்ளும் அளவிற்கு தனது பணியை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார் பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை காவல் ஆய்வாளர் திரு கிள்ளிவளவன் அவர்கள் .