மதுரை மாநகர திலகர் திடல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டைட்டன் ஷோரூம் சிக்னல் அருகில், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் லிங்ஸ்டன் (த.கா.1418), காவலர் விஜயன் மற்றும் காவலர் முகம்மது ரபீக் (3094) ஆகியோர் வாகனத் தணிக்கை மேற்கொண்டு கொண்டிருந்தனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் ஒரு ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கீழ முத்துப்பட்டியைச் சேர்ந்த ஹரி பிரகாஷ் (வயது 20, தந்தை: பாண்டியராஜன்) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையின் போது, அவர் முதலில் முரணாக பதிலளித்தார். பின்னர் காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பிறகு, மேற்படி இருசக்கர வாகனம் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்குட்பட்ட சீமான் நகர் பகுதியில் திருடியதாக ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக, மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு, வாகனம் தேடப்பட்டு வந்தது. வாகனத் தணிக்கையின் போது குற்றவாளியை பிடித்த போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களின் சிறப்பான பணியை மதுரை காவல் ஆணையர் பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.