பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 03 ஆண்டுகளாக பேருந்தில் தொடர் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளியை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் அவரிடமிருந்து சுமார் 67 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்.
பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் திரு.T.கருணாகரன் தலைமையில் பேருந்து பயணிகளிடம் கைவரிசை காட்டிய திருட்டு கும்பலின் தலைவன் கைது.
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய திருக்கோவிலூரைச் சேர்ந்த கோமதி (63) என்பவர் தனது நகைகளை காணவில்லை என்று காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.A.பழனிச்சாமி அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.T.கருணாகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.சங்கர் திரு.ஆரோக்கியராஜ் தலைமைக் காவலர் திரு.அலெக்ஸ் முதல் நிலைக் காவலர் திரு.கிருஷ்ணகுமார் ஆகியோர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நகர மற்றும் விரைவு பேருந்துகளில் தொடர்ச்சியாக சோதனை செய்தும் திருட்டு குற்ற சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் இருந்தும் இந்ந தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது 4 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவரவே அவர்களை பிடிப்பதற்காக பல்வேறுகட்ட நடவடிக்கைகள் எடுத்து திருட்டு கும்பலின் தலைவராக செயல்பட்ட சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி வட்டம் பொன்னடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் கார்த்திக் (34) என்பவரை கைது செய்து விசாரணை செய்து அவரிடமிருந்து. சுமார் 67 சவரன் நகைகள் மீட்கப்பட்டு மேற்படி நகைகளை நீதிமன்றம் மூலம் உரிய நபர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் மற்ற குற்றவாளிகளை கைது செய்ய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்கண்ட குற்றவாளியை பிடித்த பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் திரு.T.கருணாகரன் அவர்கள் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.