திருப்பூர் மாவட்டம் பல்லடம் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்தும், அண்டை மாவட்டங்களான கோவை ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து பல்லடத்திற்கு குட்கா பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருவதை தடுக்கும் வகையில் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் சரவணகுமார் தலைமையிலான காவலர்கள் சின்னக்கரை சோதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருப்பூர் கோம்பை தோட்டத்தை சேர்ந்த அப்பாஸ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆறு கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக பல இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.