மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று போதை எதிர்ப்பு குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, வருகிற ஜுன் 26ம் நாள் “சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை” முன்னிட்டு, காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால் போதை பொருள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (11.06.2023) மாலை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் நடந்த நிகழ்ச்சியில் தி.நகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு.A.K.அருண் கபிலன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் (Banners), சுவரொட்டிகள் (Posters) மற்றும் துண்டு பிரசுரங்களை (Awareness Pamphlets) வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்பணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் போதைபொருட்களுக்கு எதிரான கையெழுத்து நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து லயோலா கல்லூரி மாணவ, மாணவிகளின் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் துறையின் பேன்டு வாத்திய இசைகுழுவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் எல்லைகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேற்படி விழிப்புணர்வு சுவரொட்டிகள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Jpr,Editor.