கரூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று (22.02.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ்கான் அப்துல்லா IPS., அவர்களின் உத்தரவின்பேரில் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் கலந்து கொண்டு காவலர்களின் கவாத்து நிகழ்ச்சியை பார்வையிட்டு, அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், காவல் துறையில் 25 ஆண்டுகள் தண்டனை இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய 05 காவல் அலுவலர்களுக்கு மத்திய அரசின் “அதி உத்கிரிஸ் சேவாக்” பதக்கமும், 20 ஆண்டுகள் தண்டனை இல்லாமல் பணியாற்றிய 04 காவல் அலுவலர்களுக்கு “உத்கிரிஸ் சேவாக்” பதக்கமும் வழங்கப்பட்டது.






மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ்கான் அப்துல்லா IPS., அவர்கள் பதக்கங்களை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார். பதக்கம் பெற்ற காவல் அதிகாரிகள் விவரம்:
- சகாய ராஜ், உதவி ஆய்வாளர், வேலாயுதம்பாளையம்.
- காளிமுத்து, உதவி ஆய்வாளர், மாயனூர்.
- உதயகுமார், உதவி ஆய்வாளர், DCB.
- வாசு, சிறப்பு உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு மாவட்ட காவல் அலுவலகம்.
- சக்திவேல், சிறப்பு உதவி ஆய்வாளர், பசுபதிபாளையம் காவல் நிலையம்.
- பரிமளம், சிறப்பு உதவி ஆய்வாளர், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம்.
- குப்புசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர், கரூர் நகர காவல் நிலையம்.
- கந்தசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர், தென்னிலை காவல் நிலையம்.
- பாபி, சிறப்பு உதவி ஆய்வாளர், காவல் கட்டுப்பாட்டு அறை, கரூர்.
இந்த நிகழ்வு காவலர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், அவர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.