நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யவும் மற்றும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கு தினமும் காலை மாலை வேளைகளில் ஒரு காவலரை பணியில் அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக நீலகிரி மாவட்ட காவல்துறையை கண்காணிப்பாளர் உயர்திரு முனைவர் திரு.பிரபாகர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அந்த பகுதிகளில் ஒரு காவலரை பணியில் நியமிக்க உத்தரவிட்டதோடு அல்லாமல் Hills Cop எனும் மாவட்டத்தின் சிறப்பு இரு சக்கர வாகன ரோந்து படையினரை அந்த சாலை பகுதிகளில் ரோந்து வரவும் உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்த காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு காவலர் வாய்ஸ் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.