தமிழக முதல்வர் ஆணையின் படி ஒவ்வொரு வாரம் புதன்கிழமை மக்கள்குறை தீர்க்கும் முகாம் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 16/08/2023 மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஊட்டி பாய்ஸ் கிளப்பில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் முனைவர்.பிரபாகர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் பெறப்பட்டு மனுக்களின் எதிர்மனுதாரர்களை நேரில் அழைத்து உரிய விசாரணை செய்து அதில் 44 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.