நல்லிணக்க நாள் உறுதிமொழி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பிரபாகர் , அவர்களின் தலைமையில் காவல்துறையினர் நல்லிணக்க நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
“நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி ஏடுத்துக்கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.” என்று உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு ஆய்வாளர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.