கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று (22.01.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களில் திருப்தி அடையாத 33 மனுதாரர்களின் குறைகள் ஆய்வு செய்யப்பட்டது. மனுக்களில் உள்ள பிரச்சினைகளை விரிவாக கேட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் மனுதாரர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் பொதுமக்கள் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் முக்கிய மேடையாக அமைந்தது.