கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா,. இ.கா.ப அவர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இந்த பொங்கல் விழாவை உங்களுடன் கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, பொங்கல் விழா அனைத்து சமுதாயத்தினரும் விரும்பிக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும் என்றும், அனைத்து காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இரமேஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம், காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து பொங்கலோ பொங்கல் என வெகு விமர்சையாக கொண்டாடினர்.