பெருகிவரும் இணையவழி குற்றங்களை தடுப்பதற்க்கும் கண்டறியவும் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த திரு.வில்லியம் சுரேஷ்குமார் என்பவர் ஆன்லைன் மற்றும் கூகுள் Playstore-ல் உள்ள இன்வெஸ்ட்மென்ட் அப்ளிகேஷனில் செய்தால் அதிகம் லாபம் சம்பாதிக்கலாம் என ஆன்லைனில் சில சந்தேக நபர்கள் கூறியதை நம்பி ரூ.26,18,949/- ஏமாந்து விட்டதாகவும் இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டதில் சந்தேகம் நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கோலாப்பூர் என்ற ஊரிலும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஹைதராபாத் நகரத்திலும் இருப்பதாக தெரியவந்தது பிறகு தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் IPS அறிவுரை படியும் தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் அறிவுரை படியும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாIPS, மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பூங்கோதை அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரம் ஆகிய ஊர்களுக்கு சென்று சந்தேக நபர்களை பிடித்து அவர்களிடம் விசாரணை செய்து அவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட நபரின் பணமான ரூ.15,54,000/- திரும்ப பெறப்பட்டு இன்று 13.05.2024 ந்தேதி பாதிக்கப்பட்ட நபரிடம் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா IPS.,மூலமாக ஒப்படைக்கப்பட்டது.

ஆகையால் மக்கள் யாரும் இது போன்ற அறிமுகம் இல்லாத நபர்களிடம், ஆன்லைன் மற்றும் கூகுள் Playstore-ல் உள்ள இன்வெஸ்ட்மென்ட் அப்ளிகேஷனில் பணம் கட்டி ஏமாற வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமாய் சிங் மீனா, இந்திய காவல் பணி அவர்கள் சார்பாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொ) மணிகண்டன் அவர்கள் சார்பாகவும் கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் காவல் நிலையம் சார்பாகவும் அறிவுறுத்தபடுகிறது மேலும் ஏதேனும் இணையவழி குற்றம் மூலம் பண இழப்பு நடைபெற்று 24 மணி நேரத்திற்குள் இணையவழி குற்ற இலவச உதவி எண்: 1930 ஐ அழைத்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்புள்ளது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தபடுகிறது. மேலும் இணையவழி மூலம் பண இழப்பு மற்றும் பாதிக்கப்பட்டு இருந்தால் www.cybercrime.com என்ற மின்னஞ்சல் மூலம் தங்களது
புகாரினை தெரிவிக்கலாம்.