பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில் கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியானது பெரம்பலூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலும் மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களில் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன்படி மங்களமேடு காவல் நிலையத்தில் மங்களமேடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சீராளன் அவர்கள் தலைமையிலும் குன்னம் காவல் நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் (மாவட்ட குற்றப்பிரிவு) அவர்கள் தலைமையிலும் அரசு பள்ளி மாணவ மணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 120 மாணவர்களுக்கு காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் பற்றியும் காவல்துறையில் இயங்கும் விரல்ரேகை பிரிவு மோப்பநாய்ப்படை பிரிவு வெடிகுண்டு தடுப்பு பிரிவு சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்தும் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளிடம் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுகள் (DRUGS Awareness), சாலை விதிகளை பின்பற்றுதல் (Traffic Awareness) ஏரி, குளம், ஆறு, போன்றவைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் (Drowning Awareness) மற்றும் தற்கொலைகள் எதற்கும் தீர்வாகாது என்பதை விளக்கும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

Vijaykumar,Perambalur