கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் இன்று 07.06.2024 ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும்,பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் கன்னகளவு குற்றவாளிகள், போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர் மீது அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள், பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்கள் , குற்ற வழக்குகளை விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர உதவியாக இருந்த கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.