கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS., மீட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதுபோல் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இரவிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் நவீன படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts
உயிர் நீத்த காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களின் உன்னதத்தை போற்றும் வகையில் திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் மாரத்தான் ஓட்டம்!!!
October 27, 2024