கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தின் நிறைவு நாளான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சுந்தரவதனம் IPS மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சன் டோமா பூட்டியா IPS ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அது தொடர்பான துண்டு பிரசுரத்தை வழங்கினார்.
மேலும் “வாகன ஓட்டி ஆகிய நான் எனது வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மதித்தும் எனக்கோ என்னால் பிறருக்கோ விபத்து ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்டுவேன் என்றும் இனி வரும் சந்ததிகளுக்கு முன் உதாரணமாக செயல்படுவேன் என்றும் உறுதிமொழி ஏற்கிறேன்” என்ற சாலை பாதுகாப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்.