கன்னியாகுமரி மாவட்டம், (10.06.2024) அன்று கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக பெண்ணை கடத்த முயன்ற மருமகன் மற்றும் கூட்டாளிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டு குமரிமாவட்ட போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்கும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் உதவியாக இருந்த கன்னியாகுமரி நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E. சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டினார் .