வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள், வேலூர் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மற்றும் சி.எம்.சி கண் மருத்துவமனையுடன் இணைந்து மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு இன்று 23.09.2023 காலை சுமார் 09.30 மணியளவில் காவலர் திருமண மண்டபத்தில் கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இம்முகாமில் கண்புரை, குழந்தைகளின் கண் நோய், கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வரும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் சுமார் 180 நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
Related Posts
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “சமூகநீதி நாள்” உறுதிமொழி ஏற்றனர்
September 15, 2023