வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, காட்பாடி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷன் வ/32, S/o சேகர் என்பவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடியதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் 11.04.2024-ம் தேதி காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்களின் மேற்பார்வையில் காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான போலீசார் திருவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டதில் எதிரிகள் ராஜா @ விருதம்பட்டு ராஜா வ/37 S/o காட்பாடி மற்றும் முருகன் @ கரிகிரி முருகன் வ/36 S/o பஞ்சாட்சரம் காட்பாடி என்பவர்களை விசாரணை செய்ததில் விருதம்பட்டில் இரு சக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில் எதிரியிடமிருந்து 4(நான்கு) இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Posts
அரியலூர் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் டாஸ்மார்க் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்
January 26, 2024
கீழ்ப்பாக்கம் தனிப்பட்டையினர்,ரூ.41.88 லட்சம் பணத்தினை திருடிய முன்னாள் CRPF காவலர் சக்திவேல் என்பவரை கைது செய்தனர்
November 3, 2023