வேலூர் மாவட்டம் பெரிய சித்தேரி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனியார் வாங்கியில் பணிபுரிந்து வருகிறார். 10 ரூபாய் (recharge) செய்ய link ஒன்றை அனுப்பி விவரங்களை பெற்று ஏமாற்றி வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 25,000/- பணத்தை இழந்தார்.பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவர் ஆன்லைன் மூலமாக அவருக்கே தெரியாமால் பணம் ரூபாய் 18,000/- இழந்தார்.வேலூர் பகுதியை சேர்ந்த முகமது தெளபீக் என்பவர் கிரெடிட் கார்டு லிமிட் அதிகப்படுத்தி தருவதாக வந்த அழைப்பை நம்பி பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். ரூபாய்.38,000/-குஜராத்திலிருந்து தேர்தல் பணிக்காக வந்த CISF வீரர் சுஷாந்த் நாயக் என்பவர் ONLINE LINK மூலமாக கிரெடிட் கார்டிலிருந்து ரூபாய் 70,000/- பணத்தை இழந்தது சம்பந்தமான புகார்களை பெற்று அவற்றின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோட்டீஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.புனிதா அவர்கள் வழக்கு பதிவு செய்து துரிய நடவடிக்கையின் மூலம் இழந்த மொத்த பணம் ரூபாய் 1,51,000/- மீட்கப்பட்டு இன்று (30.04.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்து இனிவரும் காலங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குருஞ்செய்திக்கோ, மின்னஞ்சலுக்கோ, தொலைபேசி அழைப்புகளுக்கோ அல்லது லிங்க்குகளுக்கோ அதன் உண்மைத் தன்மையை அறியாமல் பயன்படுத்தவோ மற்றும் விபரங்களை தெரிவிக்கவோ கூடாது என அறிவுரை வழங்கினார். இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Posts
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான93 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருளுடன் இருவர் கைது.
January 27, 2024
ஆன்லைனில் மோசடி செய்து ஏமாற்றிய நபரை கைது செய்த பெரம்பலூர் சைபர் குற்ற காவல்துறையினர்.
June 14, 2024