தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை பயணத்தின் போது தலைகவசம் அணிவதின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் மயிலாடுதுறையில் (20.01.2025) விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை காவேரி நகரில் தொடங்கிய இந்த பேரணி, பழைய பேருந்து நிலையம் வரை நடந்தது.
விழிப்புணர்வு நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
- சுமார் 50 காவல்துறையினர், 30 பொதுமக்கள், மற்றும் தன்னார்வலர்கள் இதில் கலந்துகொண்டனர்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் அவர்கள், சாலை பயணத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினர்.
- பொதுமக்களுக்கு சாலை விதிகள் தொடர்பான துண்டுப் பிரச்சுரங்கள் வழங்கப்பட்டன.
- 25 பொதுமக்களுக்கு இலவச தலைகவசங்கள் வழங்கி, பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.



பங்கேற்பாளர்கள்: இந்நிகழ்வில் மயிலாடுதுறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, மயிலாடுதுறை ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர்சிவக்குமார், மயிலாடுதுறை கோட்ட மோட்டார் வாகனப்பிரிவு ஆய்வாளர் ராம்குமார், மற்றும் மயிலாடுதுறை காவல் நிலைய மற்றும் போக்குவரத்து பிரிவு காவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து நிலையான விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய தூணாக இருந்தது.