நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் A.K. அருண் கபிலன் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 09 மனுக்களை பெற்றார்கள் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள்.பொதுமக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க உங்கள் எஸ்.பி யுடன் பேசுங்கள்: 8428103090 என்ற தொலைபேசி எண் மூலம் கள்ள சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
Related Posts
சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS
June 7, 2024
நண்பர்கள் உதவும் கரங்கள் – மறைந்த காவலர் தெய்வதிரு. பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்திற்கு 2003-ம் ஆண்டு காவலர்கள் பங்களிப்பு
October 24, 2024