நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி – வேதாரண்யம் பிரதான சாலையில், 02-02-2025, போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் வாகனச் சோதனை நடத்தப்பட்டு வந்தது. அப்போது, ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவர்களது மணி பர்ஸ் கீழே விழுந்தது.

இதை கவனித்த போக்குவரத்து முதல் நிலைக் காவலர் திரு. குப்புசாமி, உடனடியாக அதை எடுத்துப் பார்த்தபோது, பர்ஸில் ஒரு குழந்தைக்கு அணியப்பட்டிருந்த வெள்ளி இடுப்பு கயிறு (மதிப்பு ரூ. 15,000) மற்றும் வாங்கிய கடையின் ரசீது காணப்பட்டது.

சம்பவத்தை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், வேளாங்கண்ணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தவச்செல்வன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ராஜ்மோகன், திரு. முருகவேல் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்தார். விசாரணையின் போது, மணிபர்ஸ் காமேஸ்வரம் மீனவர் காலனி சேர்ந்த தம்பதியினருக்குச் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது.

பின்னர், 05-02-2025, உரியவர்களுக்கு மணிபர்ஸ் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. காவலர் திரு. குப்புசாமியின் நேர்மை மற்றும் தன்னலம் இல்லாத சேவை பொதுமக்களிடமும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.