ஜெயராஜ் மற்றும் மல்லிகா தம்பதியின் மூன்றாவது மகனாகிய திரு, ஜெ, பிரேம்ராஜ் (22), திருவாரூர் மாவட்டம், பெரிய துளார் கிராமத்தைச் சார்ந்தவர்,இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை பட்டதாரி படிப்பை முடித்துள்ளார் மேலும் கடந்த ஆண்டு(2023) நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது நாகை மாவட்ட ஆயுதப் படையில்,இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிறு வயதிலிருந்தே சமூக தொண்டாற்றுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது காவல்துறையில் பணியாற்றி தாம் வாங்கும் சம்பளத் தொகையின் பாதியை மாதம், மாதம் ஏழை எளிய மக்களின் உணவு தேவைக்கும் மற்றும் ஏழை பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கல்வி கட்டணங்கள் செலுத்தி வருகிறார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களை நேரில் சென்று அவர்களுக்கு அறிவுரைகள் கூறி மீண்டும் அவர்களை பள்ளி, கல்லூரிக்கு அனுப்புதல் மற்றும் மாற்றுக் கல்விக்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் .
இவ்வாறு இவர் பல்வேறு செயல்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறார், மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தகுந்த நல்வழி அறிவுரைகளை கூறி வருகிறார், மேலும் TNPSC, SI, POLICE போன்ற தேர்வுகளில் படித்து வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பண உதவி செய்து வருகிறார்,இவரின் இந்த நற்செயலை பாராட்டும் விதமாக அறம் செய்யும் விரும்பு அறக்கட்டளை, சென்னை சார்பாக அளிக்கப்படும் சமூக சேவகர் விருது 2024 இந்த ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள், பின்பு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர் பிரேம்ராஜிடம் தங்களுக்கு இந்த சமூக சேவைக்கான எண்ணம் எப்போது உருவானது என்பதை கேட்டபோது, காவலர் பிரேம்ராஜ் நான் படிக்கும் காலத்தில் தான் மிகவும் வறுமையில் இருந்ததாகவும் தான் கல்விக்காகவும் உணவுக்காகவும் பட்ட கஷ்டங்களை இனி யாரும் படக்கூடாது என்ற எண்ணம் தனக்குள் உருவாகியது எனவும் . மேலும் தனது வாழ்நாள் முழுவதும் தன்னால் இயன்றவரை பொதுமக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சிய இலக்கு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கூறினார்.