பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிக்குளம் கிராமம் வழியாக கஞ்சாவை காரில் கடத்திவருவதாக பாடாலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் அவர்களுககு கிடைத்த இரகசிய தகவலின்படி நிலைய காவலர்களுடன் செட்டிகுளம் to பொம்மனப்பாடி ரோட்டில் தனலெட்சுமி பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது TN 46 K 9923 எண் கொண்ட ஆட்டோ மற்றும் TN 61 A 4951 எண் கொண்ட காரில் கஞ்சா 20.770 கிலோவை கடத்தி வந்த 1. நாகப்பா (45) த/பெ தர்மலிங்கம்,செட்டிகுளம் பெரம்பலூர். 2.சுதாகர் (43) த/பெ சுப்ரமணியன் ஆலங்காடு, திருத்துறைப்பூண்டி, திருச்சி. 3. கமல் (30) த/பெ ஆறுமுகம் ஆலம்பாடி ரோடு பெரம்பலூர். 4.தமிழ்செல்வன் (28) த/பெ ராஜேந்திரன் ராதாகிருஷ்ணன் தெரு, சங்குப்பேட்டை பெரம்பலூர். 5.சந்தோஷ்குமார் (34) த/பெ பெரியசாமி இந்தரா நகர், அனனமங்கலம், வேப்ப்ந்தட்டை பெரம்பலூர் 6.மதியழகன் (35) த/பெ மாயழகு செட்டிகுளம் ஆலத்தூர், பெரம்பலூர். 7.சசிகுமார் (27) த/பெ சுந்தராசு பெருமமாள் கோவில் தெரு, சாத்தனூர், ஆலத்தூர்
பெரம்பலூர். 8.ஷாஜகான் (53) த/பெ மகபூப்கான் வடக்குமாதவி ரோடு, பெரமப்லூர். 9.அசோக்குமார் (26) த/பெ மாணிக்கம் தேவேந்திரகுல தேரு, பொம்மனப்பாடி பெரம்பலூர். ஆகிய 9 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து சுமார் 2,07,500 ரூபாய் மதிப்புள்ள 20.770 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு உபயோகித்த மேற்படி ஆட்டோ மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து பாடாலூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படியும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மேற்படி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பாடாலூர் காவல்நிலைய காவல்துறையினர்.