பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய சேமக் காவல் படையினர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று 03.04.2024 -ம் தேதி நடைபெற்றது. இந்த அடையாள அணிவகுப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.K.கற்பகம் இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.மேலும் இந்த அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை வழியாக பெரம்பலூர் வானொலி திடலில் நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) துணை்காவல் கண்காணிப்பாளர்கள் திரு.A.பழனிச்சாமி (பெரம்பலூர் உட்கோட்டம்) திரு.M.S.M.வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) திரு.S.சோமசுந்தரம் (ஆயுதப்படை) மற்றும் மத்திய சேமக்காவல் படை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதக்கரா தருவா மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.ஹேம்ராம் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.