பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையின் சார்பில், பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (22.01.2025) பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., இணைந்து தொடங்கி வைத்தனர். முகாமில் நகரில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனைச் சேவைகளைப் பெற்றனர்.


கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர்.
மேலும், இந்த நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன் மற்றும் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.


பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.