விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் 600 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளது இது எந்த பகுதியில் உள்ள ஆட்டோ என்று அடையாளம் காணுதல் மற்றும் ஏதேனும் புகார்கள் இருந்தால் சரியாக அடையாளப்படுத்த சிறமம் இருந்தது இதை மனதில் கொண்டு போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம் அவர்கள் இதில் கவனம் செலுத்தி ஈஸ்வரி ஸ்டிக்கர் நிறுவனத்தின் பங்களிப்போடு ஈசியாக உடனே கண்டறிந்து தகவல் தெரிவிக்க ஏதுவாக அடையாள ஸ்டிக்கர்கள் வடிவமைக்கப்பட்டது. இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் இதை அனைத்து ஆட்டோக்களில் முன் பின் இரண்டு பக்கமும் ஒட்டி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது போக்குவரத்து காவல் ஆய்வாளர் லாவண்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம் மற்றும் போக்குவரத்து காவல்துறயினர் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
Related Posts
உதவும் கரங்கள் -2003 பேட்ஜ் காவலர் நண்பர்கள் சார்பில் மறைந்த கோவை தலைமை காவலர் சுரேஷ்குமார் குடும்பத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டது
January 7, 2024
ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பாதுகாவலர் அறைகள் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., திறந்து வைத்தார்.
June 17, 2023