விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப. தலைமையில் (02.02.2025) நீதிமன்ற காவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நீதிமன்ற காவலர்களின் முக்கிய பொறுப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக,

  • அழைப்பாணைகளை சரியாக சார்வு செய்தல்,
  • பிடி ஆணைகளை தாமதமின்றி நிறைவேற்றுதல்,
  • சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல்,
  • வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், நீதிமன்ற வழக்குகளை முறைபடுத்தி பதிவு செய்த காவலர்கள் பாராட்டப்பட்டனர். தமது ஆண்ட்ராய்டு போனில் நீதிமன்ற வழக்கு விவரங்களை (update details) பதிவு செய்து வைத்திருந்த செஞ்சி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ஆதிமூலம், அரகண்டநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் பரந்தாமன் மற்றும் முதல் நிலைக் காவலர் செல்வகுமார் ஆகிய மூன்று காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் மற்றும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் நீதிமன்ற காவலர்கள் கலந்து கொண்டனர்.