விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்டம் மற்றும் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த தொடர் ஆடு மற்றும் கன்னக்களவு திருட்டுகளில் குற்றவாளிகளை கைதுசெய்து, சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் இ.கா.ப அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாரட்டினார்.

திண்டிவனம் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆடு திருட்டுகளை தடுக்கும் பணியில் முக்கிய பங்காற்றிய காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் கலைமணி மற்றும் அய்யப்பன், தலைமை காவலர்கள் ஜெனார்த்தனன், பூபாலன் மற்றும் முதல்நிலை காவலர்கள் செந்தில் முருகன், கோபாலகிருஷ்ணன், பாரதி மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் பாராட்டு பெற்றனர்.

அதேபோல், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் நடந்த தொடர் கன்னக்களவு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கிய பங்களிப்பு வகித்த காவல் உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ், தலைமை காவலர்கள் மகாராஜா, பாலமுருகன் மற்றும் முதல்நிலை காவலர்கள் சத்தியன், நீலமேகம் ஆகியோர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டைப் பெற்றனர்.

இந்த நிகழ்வு, காவல்துறையின் செயல்திறன் மற்றும் மக்கள் பாதுகாப்புக்காக அவர்கள் மேற்கொள்கிற பொறுப்புள்ள பணிகளை வலியுறுத்துகிறது.