விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மற்றும் காவல் துறை வாகன பராமரிப்பு ஆய்வு நடைபெற்றது.
காவல் வாகன பராமரிப்பு ஆய்வு
மாவட்ட காவல் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர காவல் வாகனங்கள் பராமரிப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



குற்ற கலந்தாய்வு கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்
🔹 மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
🔹 நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் மற்றும் அழைப்பானைகள் விரைவாக சார்பு செய்ய வேண்டும்.
🔹 காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்களை உடனடியாக விசாரணை செய்து CSR அல்லது FIR பதிவு செய்ய வேண்டும்.
🔹 பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
🔹 பழங்குற்றவாளிகளை கண்காணிக்க காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
🔹 புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்களில் பெறப்படும் புகார்களை உடனடியாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமால், இளமுருகன்,தினகரன், உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, IPS, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.