விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர நினைவூட்டு காவத்து பயிற்சி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் 250 காவலர்கள் கலந்துகொண்டனர். காவத்து பயிற்சியுடன் கூடுதலாக, சேமிப்பு முறைகள், சரிவிகித உணவு பழக்கம், உடல் நலம் மற்றும் வருமான வரி தொடர்பான பயிற்சிகளும் அனுபவமிக்க விரிவுரையாளர்களின் மூலம் வழங்கப்பட்டது.

நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா

இப்பயிற்சியின் நிறைவு விழா இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன், இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவின் ஒரு பகுதியாக, காவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கிரிக்கெட், வாலிபால், இறகுப்பந்து மற்றும் ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு,
காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.

வசதிகள் திறந்து வைத்தல் & மரக்கன்று நடுதல்

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை காவலர்களுக்காக புதிய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமால், தினகரன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருணாச்சலம், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.