விழுப்புரம்: 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டு திருவெண்ணைநல்லூர் மற்றும் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பதியப்பட்ட போக்சோ குற்ற வழக்குகளில் நீதிமன்ற ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த எதிரிகள் மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த காவல்துறை அதிகாரிகள் பாராட்டை பெற்றனர்.
இந்த சிறப்பான பணியை செயல்படுத்திய திருவெண்ணைநல்லூர் உதவி ஆய்வாளர் திரு. விவேகானந்தன், முதல் நிலை காவலர்கள் திரு. அய்யனார், திரு. ஆனந்தராஜ் மற்றும் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் திரு. சஞ்சய்குமார் ஆகியோரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன், IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
சிறப்பாகக் காவல் பணியை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்காக அவர்களுக்கு நற்சான்று சான்றிதழ்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை சற்றும் பின்தங்காது செயல்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினரின் நடவடிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.