விழுப்புரம் மாவட்டம் ரோஷணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. சரவணன் IPS அவர்களின் தலைமையில், காவல்துறையினர் மற்றும் FENGTAY INDIA CSR PROJECTS நிறுவனம் இணைந்து 15 அதிநவீன CCTV கேமராக்களை நிறுவியுள்ளனர். இவை ₹9,00,000 மதிப்பில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டன.
பாதுகாப்பு மேம்பட அமைக்கப்பட்ட இடங்கள்:
- தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மா டீ டைம்
- சந்தமேடு ரவுண்டானா
- சந்தமேடு ஜங்ஷன்
- செஞ்சி ரோடு ஆர்யாஸ் ஹோட்டல்
- NSF சிப்காட் எதிரில்
இந்த கண்காணிப்பு அமைப்பை ரோஷணை காவல் நிலையத்தில் இருந்து கட்டுப்படுத்துவதற்காக புதிய மெகா திரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்.


நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய அதிகாரிகள்:
- திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ்
- ரோஷணை காவல் ஆய்வாளர் திருமதி தரனேஸ்வரி
- பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் திரு. பிரகாஷ்
- மயிலம் காவல் ஆய்வாளர் திரு. காமராஜ்
- FENGTAY INDIA CSR PROJECTS நிர்வாகத்தினர்:
- Admin GM திருமதி தீபாலட்சுமி
- S&O Head திரு. முத்துவேல்
- External Affairs Head திரு. டேவிட்
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. சரவணன் அவர்கள் FENGTAY INDIA CSR PROJECTS நிறுவனத்தை பார்வையிட்டு, மரக்கன்றை நட்டு, நிறுவனத்தினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் இந்த முன்னெடுப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க உதவுகிறது.