மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவரின் மகன் பரத் (49) கடந்த 02.03.2025 அன்று புதுச்சேரி – சென்னை நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராம் மற்றும் தலைமை காவலர் செல்வகுமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, மரக்காணம் செட்டிநகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுரங்கத்தின் மகன் ரஜினிகாந்த் (46) என்பவர் தனது ஷேர் ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் செலுத்தி, பரத் மீது மோதி சென்றது உறுதி செய்யப்பட்டது.

விபத்து குறித்த உண்மையை விரைவாக கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகள் ராஜாராம் மற்றும் செல்வகுமார் ஆகியோரின் சிறப்பு பணியை பாராட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், IPS., அவர்களால் நற்சான்று வழங்கப்பட்டது.