விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வாகன தணிக்கையின் போது, பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 440 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசார், ஒரு பெண் பாராக்காவலர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ப. சரவணன், இ.கா.ப. அவர்களால் நேரில் பாராட்டப்பட்டு, நற்சான்றிதழ்களும் வெகுமதிகளும் வழங்கப்பட்டன.
சம்பவத்தன்று, குட்கா கடத்தி வந்த ஒரு வாகனம் சோதனையைக் தவிர்த்து பேரிகார்டு மீது மோதி தப்பிக்க முயன்றது. உடனடியாக தகவல் பெற்ற அரகண்டநல்லூர் காவல் நிலைய பாரா காவலர் திருமதி ரேணுகா, காவல் நிலையம் வெளியே வந்து, அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் திரு அர்ஜுன் அவர்களின் உதவியுடன் பேரிகார்டை அமைத்து வாகனத்தை தடுத்து நிறுத்தினார். பின்னர் விரைந்து வந்த தனிப்படையினர் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து, கடத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் வைத்திருந்த புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முக்கிய பங்காற்றிய காவல்துறையினரான:
காவல் உதவி ஆய்வாளர் திரு. லியோ சார்லஸ் தலைமை காவலர்கள் திரு. மகாராஜா, திரு. பாலமுருகன்
முதல் நிலை காவலர்கள் திரு. குமரகுருபரன், திரு. நீலமேகம், திரு. சத்தியம் காவலர் திரு. அருள் பாராக்காவலர் திருமதி. ரேணுகா
ஆட்டோ ஓட்டுநர் திரு. அர்ஜுன்ஆகியோர் அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், இ.கா.ப. அவர்களால் பாராட்டப்பட்டு, நற்சான்றிதழ்களும் வெகுமதிகளும் வழங்கப்பட்டனர்