திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., இன்று (06.01.2025) காலை தனது பொறுப்பை பொறுப்பேற்றார். மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டம் ஒழுங்கு பேணல்:
மாவட்டத்தில் பொதுமக்களின் நலனை முன்னிட்டு எந்தவித இடர்பாடும் ஏற்படாமல், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். மேலும், ரவுடிகள் மற்றும் சரித்திர குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

சொத்து சம்பந்தமான வழக்குகள்:
சொத்து தொடர்பான வழக்குகளை விரைந்து தீர்க்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் மாவட்ட காவல் துறையினர் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்றும், எதிர்காலத்தில் எந்தவித குற்றங்களும் நடைபெறாமல் தடுப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் குறைகள் மற்றும் காவல்துறை திறன்மற்றும்:
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்காக பரந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையேயான நல்லுறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

காவல் நிலைய திறன் மேம்பாடு:
திருச்சி மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக பராமரிக்கவும், மக்கள் நலனை பாதுகாக்கவும் ,காவல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் திறனையும், செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவல்துறையினரின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.