இன்று (27.03.2025) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் IPS தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணன் முன்னிலையில், புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனத்தலைவர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கான உதவி எண்கள் 181, 112 மற்றும் Kavalan App பற்றிய பயன்கள் குறித்து விளக்கமளித்தார். மேலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருட்கள் தவிர்க்கும் வழிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மொத்தம் 2500 பேர் இதில் கலந்து கொண்டனர். மாணவ மாணவியர்கள் அனைவரும் Kavalan உதவி செயலியை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.